புது ரூட்டு போட்ட பாபா.. தாழ்ப்பாள் போட்ட மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


பதஞ்சலி நிறுவனம் கடந்த வாரத்தில் கொரோனா வைரஸிற்கான மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து, இதற்கான ஆதாரத்துடன் இன்னும் ஏழு நாட்களில் மருந்தையே வெளியிடுவதாக அறிவித்தது. இதன்படி, ஜூன் 23 ஆம் தேதியான நேற்று கொரோனாவை குணப்படுத்த கூடிய புதிய மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக பாபா ராம்தேவ் கூறுகையில், இந்த மருந்து 250 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மருந்தை உட்கொண்ட 69 விழுக்காடு நபர்கள் மூன்று நாட்களில் குணமடைந்து உள்ளார்கள் என்றும், ஏழு நாட்களில் அனைத்து நோயாளிகளும் 100 விழுக்காடு குணமடைந்து விட்டனர்.

இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்யப்பட்ட நோயாளிகளில் ஒருவர் கூட உயிரிழக்கும் நிலை ஏற்படவில்லை என்றும், பதஞ்சலி ஆராய்ச்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஜெய்ப்பூரில் இருக்கும் தேசிய மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 500 விஞ்ஞானிகளும் இணைந்து இரவு இந்த மாத்திரையை கண்டுபிடித்து உள்ளனர். 

துளசி, அஸ்வதந்தம் போன்ற மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள மருந்து, முதல் சான்று அடிப்படையிலான ஆயுர்வேத மருந்தாகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மாத்திரையை ரூ.485 க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில், 2 மாத்திரைகளை உணவு உண்ட பின்னர் 30 நிமிடங்களுக்கு பிறகு, சுடு நீரில் கலந்து சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

இந்த நிலையில், பாபா ராம்தேவை அறிமுகம் செய்துள்ள கொரோனா சிகிச்சைக்கான மருந்தை ஆய்வு செய்து முடிக்கும் வரை அது தொடர்பான விளம்பரங்கள் மற்றும் குணப்படுத்தும் மருந்து போன்ற அறிவிப்புகளை நிறுத்தி வைக்குமாறு அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்த ஆய்வுகளின் தரவுகளை ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Patanjali Ayurveda Baba Ramdev Advertisement Warn by Central govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->