பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்...!! - Seithipunal
Seithipunal


பிபிசி ஆவணப்படம், அதானி குழுமம் முறைகேடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டம்...!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இறுதியில் நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அந்த வகையில் இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பதவி ஏற்றுள்ள திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.

குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-2024 ஆம் ஆண்டிற்கான முழு நிதர் நிலை பட்ஜெட்டை நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். எதிர்க்கட்சிகள் பிபிசி ஆவணப்படம், அதானி குழுமத்தின் முறைகேடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ள நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

பட்ஜெட் கூட்ட தொடரின் முதல் 2 நாட்களில் @பூஜ்ஜிய நேரம் மற்றும் கேள்வி நேரம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 2வது கட்டமாகவும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament budget session begins today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->