அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு! - Seithipunal
Seithipunal


நீந்தி சென்று தப்பிய பாகிஸ்தானியர்கள்! 

இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லையில், குஜராத்தின் கட்ச் அருகே உள்ள 'ஹராமி நாலா' ஓடை பகுதியில் இருந்து கைவிடப்பட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்திய மீனவர்கள் இந்த ஓடை பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இருப்பினும், பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க நுழைகின்றனர். இப்பகுதி 22 கிமீ நீளமும் 8 கிமீ அகலமும் கொண்ட சதுப்பு நிலப் பகுதி அகும். இதே போன்று ஜூன் மாதம், 'ஹராமி நாலா'வில் இருந்து மூன்று பாகிஸ்தான் படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 இதுகுறித்து எல்லை பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது "ஹராமி நாலா'வில் படகு ஒன்று காலை 6 மணியளவில் அப்பகுதியில் ரோந்து வந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த படகில் சிலர் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் தண்ணீரில் குதித்து பாகிஸ்தான் பக்கம் நீந்தி தப்பி சென்றனர். அந்தப் படகை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சோதனை செய்தபோது சில ஐஸ் பெட்டிகள், ஜெர்ரி கேன்கள் மற்றும் மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டன.

 பாகிஸ்தான் மீனவர்கள் எல்லை பாதுகாப்பு படை ரோந்துப் பிரிவைக் கண்டதும் தங்கள் படகுகளை விட்டுவிட்டு பாக்கிஸ்தான் பக்கம் ஓடுகிறார்கள். மே மாதத்திலும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஒன்பது பாகிஸ்தான் மீனவர்களைக் கைது செய்தனர்" என எல்லை பாதுகாப்பு அதிகாரி பிரபல தேசிய ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistani boat trespassed into Indian territory


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->