எந்த ஒரு நாடும் ஆதரிக்காததால் ஐ.நா-வில் அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! கெத்து காட்டிய இந்தியா! - Seithipunal
Seithipunal


ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை 42-வது  கவுன்சில் கூட்டம் இந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தநிலையில், காஷ்மீரில் தற்போது மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக இக்கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் பிரச்சினை எழுப்பப்பட்டது. இக்கூட தொடரிலேயே காஷ்மீர் விவகாரம் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவரவும் பாகிஸ்தான் கடும் முயற்சிகளை செய்தது.

ஆனால் அப்படி தீர்மானத்தைக் கொண்டுவர குறைந்தபட்சம் 16 நாடுகளின் ஆதரவும் தீர்மானத்தைக் கொண்டு வந்த பிறகு அதில் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவு தேவை. அதன்படி இந்த தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்து விட்டது , தீர்மானத்தை கொண்டுவர 16 நாடுகளின் ஆதரவை பாகிஸ்தானால் பெற முடியாததால் அந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan try to complain kashmir issue in unhrc


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->