மோடிக்கே தடை போட்ட பாகிஸ்தான்.! கடும் எரிச்சலில் இந்தியா.! - Seithipunal
Seithipunal


காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவுவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த மாதம் 5 ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரின் 370 பிரிவுவை இந்திய ரத்து செய்ததை ஐநா சபையில் கொண்டுவந்து சர்வதேச பிரச்சனையாக்க முன்னெடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு சீனா மட்டுமே ஆதரவளித்த நிலையில் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.

இதையடுத்து, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையைப் பயன்படுத்துவதில் தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. அதன்படி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும்  பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.

இந்தநிலையில், சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக  இன்று சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். ரியாத்தில் நடை பெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3 வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 

 சவுதி அரேபிய மன்னரின் சந்திப்பின்போது எரிசக்தி, நிதி உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், பாக்கிஸ்தான் வான் பரப்பு வழியாக சவுதி அரேபிய  செல்வதற்கு பாக்கிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது.  

இந்திய தலைவர்களின் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தனது வான் பரப்பில் அனுமதியளிக்காதது மூன்றாவது முறை ஆகும். ஒரு தேசத்தின் முதன்மை  தலைவர்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டதற்கு இந்தியா பாக்கிஸ்தான் மீது கடும் எரிச்சலில் உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan not allowed for modi for fly over pakistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->