ஆன்லைன் ரம்மி அரக்கனுக்கு அதிரடி தடை! அதிரடியாக அறிவித்த மாநில முதலவர்!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் - இளைஞர்களிடையே மன உளைச்சல் அதிகமாகி தற்கொலை, தனிமை போன்ற பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆன்லைனில் ரம்மி விளையாட்டு விளையாடும் இளைஞர்கள் தங்களது பணத்தையும் இழந்து உயிரையும் விடும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநில அரசு ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளை அம்மாநிலத்தில் தடை செய்வதாக அறிவித்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வெங்கடராமையாசெய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இளைஞர்களை தவறான வழிக்கு நடத்துகின்றன. அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகிறது. இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் நடவடிக்கையாக, இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய முடிவு செய்துள்ளோம்.

இந்த தடையை மீறி ஆன்லைன் சூதாட்டம் நடைபெற்றால், ஆன்லைன் சூதாட்ட அமைப்பாளர்களுக்கு முதல் முறை ஒரு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறையும் தடையை மீறி நடந்துகொண்டால் 2 ஆண்டு சிறைத் தண்டனை அபராதம் விதிக்கப்படும். இதேபோல் தடையை மீறி இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடினாலும் அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கிடைக்கும்" என்று அந்த அமைச்சர் வெங்கடராமையர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online rummy banned in andra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->