முழு ஊரடங்கு எதிரொலி: ஆன்லைன் மூலம் மது விற்பனை., தனி ஆப்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், இதனை கட்டு படுத்தும் விதமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் முழு ஊரடங்கின் போது ஆன்லைன் மூலம் மது விற்பனை விற்பனை செய்ய சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தின் மார்க்கெட்டிங் கழகம் லிமிடெட் சார்பில், நாளை முதல் ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் போனில் இதற்கென்று தனி ஆப் மூலமாகவும் மதுபானங்களை ஆர்டர் செய்ய அம்மாநில அரசு வழிவகை செய்துள்ளது.

இதுகுறித்து, அம்மாநில அரசு அளித்துள்ள விளக்கத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுப்பதற்காக ஆன்லைன் மூலம் மது விற்பனையை அரசு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் முழு ஊரடங்கின் போதும் அம்மாநில அரசு ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online liquor sale


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->