13 பேருடன் மாயமான இந்திய விமானம்!! ஒரு வீரர் அடையாளம் காணப்பட்டார்!! - Seithipunal
Seithipunal



அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் ஊழியர்கள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தம் 13 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

அந்த விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்திற்கு மேல் ஆகியும், மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை. தரைக்கட்டுபாட்டு நிலைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன.

இந்நிலையில், மாயமான விமானத்தை கண்டறிய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முன்வந்துள்ளது. இஸ்ரோவின் ரிசார்ட் வகை செயற்கைக்கோள்களின் மூலமாக, விமானத்தை தேடும் பணி தொடங்கியது. 

இந்தநிலையில், ஏஎன்–32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் யார் என்பது வெளியிடப்படாமல் இருந்தது. அவர்களில் ஒருவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த 27 வயது நிரம்பிய லெப்டினன்ட் மோகித் கார்க் என்பது தெரியவந்துள்ளது. விமானம் மாயமான தகவல் அறிந்ததும் மோகித்தின் தந்தை சுரிந்தர் கார்க் அசாமுக்கு விரைந்துள்ளார். மோகித்துக்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி அசாமில் ஒரு வங்கியில் பணிபுரிகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one man identified flight traveled


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->