துவங்கியது ஓணம் பண்டிகை..! கொண்டாட்டத்தில் மக்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த கொண்டாட்டம் இன்று தொடங்கியுள்ளது, மக்களும் மகிழ்ச்சியுடன் துவங்கியுள்ளனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் துவங்கியிருக்கின்றன.

கேரள மக்களின் பிரதான பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாட்டம், அத்தம் நட்சத்திர தினமான இன்று அந்த மாநிலம் முழுவதும் துவங்கியது. இந்நிலையில் தமிழக - கேரள எல்லையில் இருக்கும் குமரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் ஓணம் கொண்டாட்டம் தொடங்கியது.

குழித்துறையில் ஓணம் கொண்டாட்டம் தொடங்கியதையடுத்து அனைவரும் புத்தாடையுடன் மஞ்சள் நிறத்தில் ஓணக்கோடி என அழைக்கப்படும் சால்வாய் மற்றும் புத்தாடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, ஓண ஊஞ்சல் கட்டி கொண்டாடினர். இன்றிலிருந்து பத்தாம் நாள் திருவோணம் பண்டிகை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

onam celebration started in kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->