கர்நாடகா : பாம்புடன் குடும்பம் நடத்தி வந்த பாட்டி.. காரணம் என்ன தெரியுமா.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மானஷா. இவருடைய கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்பு மானஷாவின் வீட்டுக்குள் ஒரு நாகப் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த மானஷா, இறந்துபோன தன் கணவர் மறுபிறவி எடுத்து நாகப் பாம்பாக வந்திருப்பதாக நினைத்து அதற்கு பால் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக அந்த பாம்புடனே குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
 
இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அந்தப் பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மானஷா, தனது கணவர் தான் பாம்பு உருவில் வந்துள்ளார் எனக் கூறி பாம்பை பிடிக்கக் கூடாது என்றும், வீட்டில் இருந்து வெளியேற்றக் கூடாது என்றும் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள், மானாஷா வளர்த்துவரும் நாகப்பாம்பு குறித்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old women living with snake in Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->