நீட் தேர்வு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது..! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நடைபெறும் நீட் தேர்வு, அடுத்த ஆண்டு நடைபெறும் தேதி மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான நாட்கள் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. 

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு, தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு பக்கம் வழக்கு, எதிர்ப்புகள், போராட்டங்கள் என இருந்தாலும், மறுபக்கம் அரசு சார்பிலேயே பயிற்சி வகுப்புகள், சிறப்பு ஏற்பாடுகள் என மாற்று வழிகளும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

இந்த நிலையில் அடுத்த வருடம் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வானது 2020 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி நடைபெற்று, தேர்வு முடிவுகள்  2020 ஆம் ஆண்டு ஜூன் நான்காம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலமாக டிசம்பர் 2 ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது குறித்த  தகவல்களுக்கு ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அனைத்து அரசியல் கட்சிகளுமே வாக்குறுதி அளித்து வரும் நிலையில், அடுத்த வருடமும் நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. இது நிச்சயம் நீட்தேர்வு ரத்தாகும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

officialy announced about neet exam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->