என்.பி.ஆரை மட்டும் தடுக்க மாட்டோம்.. உத்தவ் தாக்கரே தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த விசயத்திற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா குடியுரிமை சட்டத்தை ஆதரித்து மக்களவையில் வாக்களித்துள்ளது. 

இருப்பினும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவை வாக்கெடுப்பின் போது பங்கேற்கமால் புறக்கணிப்பு செய்தது. சிவசேனா தரப்பில் குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக மக்களிடம் தவறான புரிதல் உள்ளது என்று தெரிவித்தது. 

பாஜகவும் இதையே கூறி, சிவசேனா வெளிப்படையாக இதனை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இருப்பினும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை  அனுமதி செய்ய இயலாது என்றும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தடையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம் என்பது வேறு.. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வேறு. குறியுரிமை திருத்த சட்டமானது மஹாராஷ்டிராவில் அமலாகும் என்று யாரும் கவலைகொள்ள வேண்டாம். 

தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த இயலாது.. இந்த சட்டத்தின் காரணமாக இந்து முஸ்லீம் மட்டுமல்லாது ஆதிவாசி மக்களும் பாதிப்பை சந்திப்பார்கள். என்.பி.ஆர். என்பது என்பது நடைமுறையில் உள்ளது தான். இதில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NPR approved in Maharastra state


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->