மின்துறை ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்! இறுதி எச்சரிக்கை விடுக்கும் புதுச்சேரி அரசு! - Seithipunal
Seithipunal


எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிசீலனை!

புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கவும் நடவடிக்கையில் நம் மாநில அரசு ஈடுபட்டு இருந்தது அதற்கான டெண்டரும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துணை மின் நிலையங்களில் புகுந்த போராட்ட குழுவினர் மின்னிணைப்புகளை துண்டித்ததால் மக்களால் மாநிலம் எதுலையும் மூழ்கியது. பின்னர் அவசர களத்தில் இறங்கிய மின்துறையினர் இணைப்புகளை சரி செய்த பிறகு மின்வினியோகம் செய்யப்பட்டது. இந்த பணியினை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நேற்றுடன் ஐந்தாவது நாளாக மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனை கண்டித்து வில்லியனூர், ஒதயம்பட்டு, ஆரியபாளையம், சிலுக்காரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் விநியோகம் பாதிக்காமல் இருக்க ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் ஓய்வு பெற்ற ஊழியர்களையும் பணியமத்தப்பட்டுள்ளனர். துணை மின் நிலையங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மத்திய அரசின் அதிவிரைவு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அவசர அழைப்பை ஏற்று மத்திய கிரீடு அதிகாரிகள் 24 பேர் துணை மின் நிலையங்களில் தானியங்கி பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மின்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

மின்துறை செயலாளர் அருண் சார்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸில் "துணை மின் நிலையங்களின் மின் இணைப்பு துண்டித்ததால் கதை கடந்த ஒன்றாம் தேதி புதுச்சேரி முழுவதும் மின்தடை ஏற்பட்டது ஊழியர்களின் இச்செயல் சட்டப்படி தண்டனைக்குரியது. மின்துறை என்பது மக்களின் சேவைக்கானது. பொதுமக்களின் சேவையை பாதிக்கும் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை அனுமதிக்க முடியாது. மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் இந்திய தொழிலாளர்கள் தகராறு சட்டம் 1947 இன் படி சட்டவிரோதமானது. எனவே ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மின் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மின்துறை தயாராகி வருகிறது. இந்நிலையில் மின்துறையால் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தொழிலாளர்கள் தகராறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் மின்துறை ஊழியர்கள் மீது அடுத்த கட்டமாக எஸ்மா சட்டத்தின் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Notice sent to power department employees final warning


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->