இந்தியாவுடன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை..! இம்ரான் கான்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை ரத்து செய்துள்ளது. அதனால் அந்த பகுதிகளில் பெரும் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியின் முடிந்தன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறி உள்ளன.

ஆனால் பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கையை கைவிவிட்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.  

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:- 

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.

இனிமேல் செய்வதற்கு ஏதுமில்லை. இருப்பினும், இந்தியா தொடர்ந்து குறை கூறி வருகிறது. இந்தியாவில் இருப்பவர்களை சமாதானப்படுத்தவே இந்தியா அவ்வாறு கூறுவதாக எண்ணத் தோன்றுகிறது. எனவே, இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லை.

என்று அவர் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nothing is there to speak with india imrankan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->