#கேரளா || குழந்தைகளை பாதித்த நோவா வைரஸ்.. அச்சத்தில் பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


மாணவர்களிடையே புதியவகை நோவா வைரஸ் பரவிவருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம், விழிஞம் பகுதியில் உள்ள தொடக்க பள்ளிக்கு சென்ற சில மாணவர்கள் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டனர். அதில் சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

மாணவர்களின் ரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியதில் 2 மாணவர்களுக்கு புதிய வகை நோவா வைரஸ் பரவியது தெரியவந்தது. இது சுகாதாரதுறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நோரோ வைரஸ் பாதித்தவர்களுக்கு வாந்தி மயக்கம், தலைவலி, காய்ச்சல், அடி வயிற்றில் வீக்கம் போன்றவை அதன் அறிகுறிகளாக கருதப்படுகிறது.

தொற்றுபாதித்தவர்களிடம் தொடர்ப்பில் இருப்பவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படுகிறது. நோவா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும் என சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

norovirus cases Confirmed in Kerala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->