கேரளாவில் பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ்.!  - Seithipunal
Seithipunal


அண்டை மாநிலமான கேரளாவில் கொச்சி காக்கநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி மற்றும் பேதி ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் சில மாணவர்களின் பெற்றோருக்கு நோரா வைரஸ் பாதிப்பு இருப்பதும், அதன் மூலம் மாணவர்களுக்கும் இந்த வைரஸ் பரவி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. அதன் பின்னர் பள்ளியில் நோய் அறிகுறியுடன் காணப்பட்ட சுமார் 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். 

அந்த ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியதில் இரண்டு மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த இரண்டு மாணவர்களும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

மேலும், அந்த மாணவர்களின் பெற்றோர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நோரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, நோரா வைரஸ் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமே பரவுகிறது. இதனால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளோரின் கலந்த குடிநீரையே பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

noro virus infection to school student in kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->