போக்ஸோ சட்டத்தில் கைது செய்தால் கருணையே கிடையாது.! குடியரசுத் தலைவர் தகவல்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலம் சம்சாபாத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி கால்நடை பெண் மருத்துவர்  நான்கு பேர் கொண்ட கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதே இடத்திலையே பெண் மருத்துவரை உயிரின் எரித்துக் கொலைகொடூரங்களை அரங்கேற்றிய நான்கு பேரும் இன்று அதிகாலை தெலுங்கானா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
 
பெண் மருத்துவர் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், அந்த கொடூர மனம் படைத்த நான்கு குற்றவாளிகளையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா காவல்துறையையும்  பாராட்டியும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், பாராட்டியும் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதலங்களில் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக்கூடாது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மேலும், நாடாளுமன்ற கருணை மனுக்களை ஆய்வுக்கு உட்படுத்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்திள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no excuse for pocso criminal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->