சீனிவாச கவுடாவின் சாதனையை முறியடித்த மற்றொரு கம்பளா வீரர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போலவே கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய போட்டியாக கம்பாளா போட்டி நடத்தப்படும். இந்த போட்டியில் ஒரு ஜோடி எருமை மாட்டுடன் இளைஞர்கள் சேட்டில் ஓடும் போட்டி இது.

இந்த ஆண்டுக்கான கம்பாளா போட்டி துவங்கப்பட்ட நிலையில், சில நாட்கள் முன்பு கர்நாடகத்தில் உள்ள மூடபித்திரி என்ற கிராமத்தில் கம்பாளா போட்டி விமர்சியாக நடைபெற்றது. 250 ஜோடி எருமைகள் போட்டியில் கலந்து கொண்டனர். 

இந்த போட்டியில் சீனிவாச கவுடா என்கின்ற இளைஞர் தனது எருமை மாட்டுடன் 142.50 மீட்டர் தூரத்தை 13.62 வினாடியில் கடந்து முதல் பரிசை வென்றார். கம்பாளா போட்டிகளில் கடந்த 30 ஆண்டு கால சாதனையை சீனிவாச கவுடா முறியடித்தார்.

இந்நிலையில், சீனிவாச கவுடாவின் சாதனையை மற்றொரு கம்பளா வீரர் முறியடித்துள்ளார். 100 மீட்டர் தூரத்தை 9.51 நிமிடங்களில் கடந்து கம்பளா வீரர் நிஷாந்த் ஷெட்டி சாதனை படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nishanth Shetty break the Srinivasa Gowda record


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->