கரையை கடக்க துவங்கிய நிசர்கா.. வானிலை மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அலிபாக் அருகே நிசர்கா புயல் கரையை கடக்க துவங்கியுள்ளது. இந்த புயல் இன்று காலை தீவிரமடைந்த நிலையில், இன்று காலை முதல் மதியம் வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதன்படி தற்போது 110 கிமீ வேகத்தில் காற்றுடன் புயல் கரையை கடக்க துவங்கியுள்ளது. மேலும், முன்னதாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த புயல் கரையை கடக்க 3 மணிநேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், புயல் கரையை கடந்த பின்னரே ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்கள் தெரியவரும். இந்த புயல் கரையை கடந்த பின்னர், நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nisarga Cyclone started pass on land in Maharashtra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->