நிர்பயா குற்றவாளிகளுக்கு இதுதான் தீர்ப்பாக இருக்க வேண்டும்.. முதல்வர் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


நிர்பயா பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடப்போவதாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி நேற்று கண்ணீல் மல்க கூறியுள்ளார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் ஒருபோதும் தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று அவர்களின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தம்மிடம் சவால் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிர்பயாவின் தாயார், nirbaya mother,

மேலும் குற்றவாளிகளுக்கு அரசு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் வரை தமது போராட்டம் ஓயாது என்றும் அவர் கண்ணீல் மல்க தெரிவித்தார். முன்னதாக நாளை காலை நிறைவேற்றப்பட இருந்த தூக்குத்தண்டனை நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இரண்டாவது முறையாக குற்றவாளிகளின் தண்டனை இரத்தாகியுள்ளது இந்திய அளவில் மக்களிடையே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது மிகவும் வருத்தமளிக்கிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் நேற்று பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், நிர்பயா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகளின் தண்டனை மீண்டும் இரத்தாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. 

இவர்கள் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிக்க பார்க்கிறார்கள்.. இது போன்ற குற்றங்களுக்கு 6 மாதத்தில் தூக்கு உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nirbaya case aravind kejriwal twit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->