தமிழகத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம்.! மத்திய அரசு தீவிரம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மத்திய அரசின் புதிய ராக்கெட்  ஏவுதள விரிவாக்கம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிணத்தில் அமைப்பதற்காக வருவாய்த்துறையினர் நில அளவீடுகள் செய்யும் பணியினை ஈடுபட்டு வருகின்றனர்.  

தற்போது 3வதாக உருவாக்கப்பட உள்ள  புதிய ஏவுதளம் அமைப்பதற்கு ஏற்ற இடமாக, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் இருக்கின்றன. மேலும் விரிவாக்கம் தொடர்பாக புதிய ஏவுதளம் தொடங்கப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏவுதளம் அமைப்பதற்கு சுமார் இரண்டரை கிலோமீட்டர் சுற்றளவில் 3500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளன இது தொடர்பாக திருச்செந்தூர் வட்டாட்சியர் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் தலையாரிகள் கொண்டு  நில அளவீடுகள் செய்யும் பணியினை ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள மரங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new rocket launching place in tamil nadu . central government intensity


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->