தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பத்தாம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தேர்தல் பிரச்சாரங்களுக்கும், பிரசார பொதுக் கூட்டங்களுக்கும், வாக்கு சேகரிப்பின் போதும் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கான பிராசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி உள் அரங்குகளில் நடத்தப்படும் பொதுக் கூட்டங்களில் 50 சதவீத பார்வையாளர்களுடனும், திறந்தவெளி மைதானத்தில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களில் 30 சதவீத பார்வையாளர்கள் அல்லது மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி அளிக்கப்படும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடனும் பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அதேவேளையில் வாகன பேரணி, நடைபயணம் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New restrictions for Election campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->