144 தடை உத்தரவு இருக்கும் நிலையில், மது விற்பனை செய்ய புதிய திட்டம்.. குடிமகன்களின் கஷ்டத்தைப் போக்க முதலமைச்சர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மது கிடைக்காமல் ஒரு சில குடிமகன்கள் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டனர். இது எடுத்து குறைந்த அளவு மது விற்பனை செய்ய கேரள அரசு முடிவு செய்தது. அதற்கான அனுமதியும் வாங்கி உள்ளது. 

தற்போது யார்யார் மது வாங்கி குடிக்கலாம் என்ற தகவலை கேரள அரசு வெளியிட்டுள்ளது. மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதிலிருந்து விடுபட நினைப்பவர்கள், மது கிடைக்காமல் நடுக்கத்திற்கு உள்ளானவர்கள் தங்கள் வீட்டு அருகாமையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை, சிறப்பு தனியார் மருத்துவமனை போன்ற மருத்துவ மையங்களுக்கு சென்று தங்களுக்கு மது அருந்தாவிட்டால் உடல் நடுக்கம் ஏற்படுகிறது என்பதை வலியுறுத்தி மருத்துவ பரிசோதனை செய்து அதன் பிறகு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு வாங்கி வர வேண்டும்.

 அந்த சீட்டை மது வாங்குவதற்காக சிறப்பு பால்ஸ் போல அரசு கருதுகிறது. அவர்கள் தங்களுக்கு தேவையான அளவு மதுபானத்தை வாங்கி கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new plan to sell alcoholic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->