ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கண்டிஷன்.! ஐயப்ப சுவாமிகள் கவனத்திற்கு.!  - Seithipunal
Seithipunal


தெற்கு ரயில்வே சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்து இருக்கின்றது.

கார்த்திகை மாதம் துவங்கி இருக்கும் நிலையில், ஐயப்பனுக்கு மாலையிட்டு சபரிமலை கோவிலுக்கு புனிதப்பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. சென்ற வருடம் சபரிமலையில் பெண்களை அனுமதித்ததன் காரணமாக பலர் அதிருப்தியில் இருந்தனர்.

இதன்காரணமாக வழிவழியாக ஐயப்பனை வணங்கி வரும் பலரும், தடங்கல் ஏற்பட்டதாக நினைத்து அதனை புறக்கணித்தனர். இந்த வருடம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து கேரளாவில் இருக்கும் சபரிமலை கோவிலுக்கு மாலை போட்டுக் கொண்டு வழிபட வருகின்றனர்.

பெரும்பாலும் சபரி மலைக்குச் செல்பவர்கள் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம். பெரும்பான்மையான பக்தர்கள் ரயிலில்தான் பயணம் செய்து சபரிமலை சென்று அடைகின்றனர். அப்படி செல்பவர்கள் பூஜைகள் செய்வதற்கு ரயில்களில் இருக்கும் கழிவறைக்குள்ளேயே குளிக்கின்றனர். இதன் காரணமாக பற்றாக்குறை ஏற்படுகிறது.

மேலும் பூஜை செய்கிறேன் என்ற பெயரில் கற்பூரம் போன்றவற்றை ரயில்க்குள்ளயே ஏற்றி ஆபத்தை ஏற்படுத்தும் சில செயல்களை செய்கின்றனர். இதன் காரணமாக விபத்துகள் ஏற்பட கூடும். இதுபோன்ற ஆபத்துக்களை தடுக்கும் வண்ணம், தெற்கு ரயில்வே சபரிமலை பக்தர்களுக்கு ரயில்களுக்குள் குளிப்பது, பூஜை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new condition for iyyapa baktas


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->