மத்திய அரசிடம் சரண்டர் ஆன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.! வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் நெட்ஒர்க் சேவைக்கான அலைக்கற்றை பாக்கி தொகையினை அரசிடம் செலுத்துவதற்கு அக்டொபர் மாதத்தின் 21 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்த அறிவிப்பின் படி நிறுவனங்கள் அனைத்து நிறுவனங்களும் பாக்கி தொகையை செலுத்திவிடும் என்று மக்கள் எண்ணியிருந்த நிலையில்., கடைசி தேதியான 21 ஆம் தேதிக்கு., மூன்று நாட்கள் முன்னதாகவே தவணை தொகையினை செலுத்தியுள்ளது. 

மேலும்., இந்தியாவுடைய மிகப்பெரிய நெட்ஒர்க் நிறுவனம் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் அரசிடம் இருந்து பெற்ற ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை தவணை தொகையான ரூ.2,421 கோடியை செலுத்தியுள்ளது. 

மேலும்., முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக உள்ள ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நெட்வொர்க் பாக்கி தொகையான ரூ.1,133 கோடியை செலுத்தியுள்ள நிலையில்., ஏர்டெல் நிறுவனமும் தனது பாக்கி தொகையான ரூ.977 கோடியை செலுத்தியுள்ளது. 

அலைபேசி நிறுவனங்களின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பாக்கியை செலுத்தும் நெருக்கடி பிரச்னையை குறைக்க., வருடாந்திர தவணை எண்ணிக்கையை 10 -ல் இருந்து 16 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. 

இந்த நிலையில்., தொலைத்தொடர்பு செயலாளரான அன்ஷ் பிரகாஷை சந்தித்த வோடபோன் நிறுவன தலைமை செயலதிகாரி., நெட்ஒர்க் துறையில் கடுமையான நிதி நெருக்கடி இருந்து வருவதாகவும்., இதனால் கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என்றும்., கட்டணம் குறைப்பு மற்றும் அழைப்பு இணைப்பு கட்டணம் குறித்த விவாதத்தை மேற்கொண்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

network company paid amount to central govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->