12 கி.மீ. பயணம் செய்து ஒரு மாணவனுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்.!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் கிராமத்தில் மொத்தம் 150 பேர் வசித்து வருகின்றனர். இங்கு அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. 

இந்தப்பள்ளியில், ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இருப்பினும், கார்த்திக் ஷெகோக்கர் என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும் மூன்றாம் வகுப்பு  படித்து வருகிறார். 

இந்த நிலையில், அந்த மாணவருக்கு பாடம் நடத்துவதற்காக கிஷோர் மங்கார் என்ற ஆசிரியர் தினமும் 12 கி.மீ. பயணம் செய்து பள்ளிக்கு வருகிறார். வழக்கம் போல் காலையில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இருவரும் தேசிய கீதம் பாடிய பின்னர் தான் வகுப்பு தொடங்கும். 

இது குறித்து ஆசிரியர் கிஷோர் மங்கார் தெரிவித்ததாவது, "இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே ஒரு மாணவர் மட்டுமே தான் படித்து வருகிறார். அதேபோல், இந்த பள்ளியில் நான் மட்டும் தான் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

இந்த மாணவருக்கு அனைத்து பாடங்களையும் நான் கற்று தருகிறேன். அந்த மாணவருக்கு அரசால் வழங்கப்படும் மதிய உணவு திட்டம் உள்பட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். 

150 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்கிறார். இருப்பினும், அந்த மாணவரின் கல்விக்கு தடை விதிக்காமல், பள்ளி நிர்வாகம் தொடர்ந்து இந்த பள்ளியை நடத்தி வருவது குறிப்பிட்டது தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra teacher twelve km travel for teache one student


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->