வேலை தருவதாக பெண்ணிடம் பண மோசடி செய்த கும்பல் - போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்தார். 

அதில் கொடுத்திருந்த இணையதள பக்கத்தில் சென்று பார்த்த போது இளம்பெண்களுக்கு பிடித்தமான வேலை செய்ய ஆட்கள் தேவை என்றும் வேலைக்காக பணம் செலுத்த வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த பெண் தனக்கு பிடித்த வேலை கைநிறைய சம்பளத்துடன் கிடைக்க போகிறது என்ற ஆசையில் அந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருந்த வங்கி கணக்கிற்கு ரூ.5¼ லட்சம் வரை பணத்தை அனுப்பினார். ஆனால் வேலை சம்பந்தமாக அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 

இதனால் சந்தேகம் அடைந்த அவர் அந்த இணையதள பக்கத்தில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டார். அப்போது யாரும் அந்த பெண்ணின் அழைப்பை எடுக்கவில்லை. 

அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near maharastra money fraud to woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->