பயங்கரவாதத்தை குறிவைக்க சொன்னால் என்னையவே குறி வைக்கிறாங்க - பிரதமர் மோடி பேச்சு.! - Seithipunal
Seithipunal


அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதி 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு  சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் ஹுடா நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "நாங்கள் பயங்கரவாதத்தை குறிவையுங்கள் என்று கூறுகிறோம். 

ஆனால், காங்கிரஸ் மோடி அரசை குறிவைக்கிறது. இதன் விளைவாக பயங்கரவாதம் பயமில்லாத ஒன்றாக ஆகிவிட்டது. இதைத்தொடர்ந்து, பெரிய நகரங்களில் பயங்கரவாதம் தலைதூக்கிவிட்டது. 

இதற்காக டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்டரை உதாரணம் காட்டிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்காக காங்கிரஸ் தலைவர் அழுதார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்" என்று பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near gujarat election campaign prime minister modi speach


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->