கர்நாடகாவில் களம் இறங்கும் தேசிய தலைவர்! சட்டமன்ற தேர்தலுக்கு போடப்படும் அடித்தளம்! - Seithipunal
Seithipunal


ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பாஜக! இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ்!

ராகுல் காந்தியின் பாதயாத்திரை!

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து கடந்த மாதம் 7ம் தேதி பாதயாத்திரை தொடங்கினார். தமிழகத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்ற பாதயாத்திரைக்குப் பிறகு கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை சென்றார்.

இதனை அடுத்து கடந்த 30 ஆம் தேதி ராகுலின் பாதயாத்திரை ஆனது கர்நாடகாவிற்குள் நுழைந்தது. அவருக்கு ராம்ராஜ் நகர் மாவட்டத்தில் குண்டலுபேட்டையில் பிரம்மாண்ட வரவேற்பு கர்நாடக காங்கிரஸ் சார்பில் வழங்கப்பட்டது. நேற்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு ராகுல் காந்தி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் உள்ள காந்தி கிரமோத்யோக் மையத்திலுள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி "இந்தியாவின் மகத்தான மகானை நினைவு கூர்ந்து அவருக்கு மரியாதை செலுத்துகிறோம். காங்கிரஸ் யாத்திரையின் 25 வது நாளில் எங்களது நிலைவாற்றல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஒற்றுமை, அகிம்சை, சமத்துவம் மற்றும் நீதி என மகாத்மா காந்தியின் வழியில் நடக்கிறோம்.

குறுகிய காலத்தில் நம்முடன் நடந்து வரும் லட்சக்கணக்கான மக்களால் இது சுயராஜ்யத்தின் வெற்றியே வெறுப்பு, பிரிவினை, அச்சம், அரசியலுக்கு எதிராக இந்திய மக்களின் அமைதியான மற்றும் உறுதியான குரலாக இந்த யாத்திரை உள்ளது. ஏராளமான பெண்களும் குழந்தைகளும் யாத்திரையில் பங்கேற்கின்றனர் காந்திஜி தனது உயிரை கொடுத்து காப்பாற்றிய அரசியலமைப்பு உரிமைகளுக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்களின் பலர் நம்புகின்றனர்.

இந்தியா முழுவதும் உள்ள எனது சக குடிமக்கள் அகிம்சை மற்றும் நல்லெண்ணம் என்ற உணர்வில் எங்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் சோனியா காந்தி! 

ராகுல் காந்தி தனது யாத்திரையை இன்று மைசூரில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டினா வழியாக மாண்டியாவுக்கு செல்கிறார். இந்த பாதயாத்திரையில் ஒரு நாள் மட்டும் கலந்து கொள்ள தற்போதைய தேசிய காங்கிரஸின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியும் அவருடைய மகள் பிரியங்கா காந்தியும் நாளை டெல்லியில் இருந்து தனி விமான மூலம் கர்நாடகா புறப்படுகின்றனர். இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு 6ம் தேதி ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் பாதயாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தல்!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தற்பொழுது கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பொம்மை தலைமையிலான பாஜக அரசு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளது. அரசு ஒப்பந்தங்களில் 40% வரை கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் "பே டூ சிஎம்" என்ற போஸ்டர்கள் கர்நாடகா முழுவதும் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் தீவிரமாக செயல்படுகிறது. 

மேலும் கேரளாவில் 19 நாட்கள் யாத்திரை செய்த ராகுல் காந்தியுடன் கலந்து கொள்ளாத சோனியா காந்தி கர்நாடகாவில் கலந்து கொள்கிறார். சோனியா காந்தியை நேரடியாக கர்நாடக யாத்திரையில் கலந்து கொள்வது அக்கட்சி தொண்டர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அடுத்த வருடம் நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலுக்கு காங்கிரஸ் பலமான அடித்தளமிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

national leader to enter the field in karnataka


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->