#Breaking: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி - தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்.! - Seithipunal
Seithipunal


கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்தால் பலரும் தங்களின் உயிருக்கு உயிரான குடும்பத்தினரை இழந்து தவித்து வருகின்றனர். முன்களப்பணியாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்த வரையில் 3.35 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4.46 இலட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 400 பேர் வரை பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்க, தேசிய மேலாண்மை ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Disaster Management Authority India Announce Relief Fund for Corona Death Rs 50 Thousand


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->