மோடியின் அலுவலகம் விலை 7.5 இலட்சம் தான்.. சமூக வலைத்தளத்தில் பகீர் தகவல்..! - Seithipunal
Seithipunal


வாரணாசி நகரில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் விற்பனைக்கு என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் இந்திய பிரதமர் மோடியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர், ஓ.எல்.எக்ஸ் விற்பனை தளத்தில், மோடியின் அலுவலகம் விற்பனைக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த அலுவலகம் 4 குளியல் அறைகள் மற்றும் ஓய்வெடுக்கும் அறைகள் என நல்ல தரத்துடன் இருப்பதாகவும், இந்த கட்டிடம் ரூ.7.5 இலட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதனைக்கண்ட காவல் துறையினர், இது குறித்து விசாரணை செய்துள்ளனர். 

இந்த விசாரணையில், மோடியின் அலுவலகம் விற்பனைக்கு என பதிவிட்ட நபர்கள், வாரணாசி ஜவகர் நகர் காலனி பகுதியை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களின் பதிவை நீக்கியுள்ளனர். அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi Varanasi Office Sale Add 4 members arrest by Police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->