ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க தயார்.. பிரதமருக்கு கடிதம் எழுதும் முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்பு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உடன் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். அந்த அசோசனை கூட்டத்தில் கொரோனா தோற்று வராமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு தேவைப்பட்டால் புதுச்சேரி மாநிலத்தில் மக்களை கொரோனா வைரஸில் இருந்து காப்பாற்ற ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மாநில அரசு உதவ தயாராக உள்ளது. இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன் என தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narayanasamy says about 144


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->