மைசூர் மாணவி கூட்டுப்பாலியல் பலாத்கார விவகாரம்.. மாணவி குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்மணி, வாக்குமூலம் தராமல் குடும்பத்துடன் ஊரை காலி செய்து விட்டதாக கர்நாடக காவல்துறை அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் கல்லூரியில் பயின்று வந்த மாணவி, தனது காதலருடன் அங்குள்ள மலைப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக சென்று வந்த நிலையில், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவருடன் வந்த காதலரை தாக்கிவிட்டு தமிழகத்தை சார்ந்த பூபதி உட்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். 

தமிழகத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த இவர்கள், கர்நாடக மாநிலத்தில் சத்தியமங்கலம் தாளவாடி வழியாக மைசூர் போன்ற நகரங்களுக்கு சென்று பணியாற்றுவதும், வார இறுதி விடுமுறை நாட்களில் ஊருக்கு வருவதும் என இருந்துள்ளது. இவ்வாறாக சாமுண்டி மலையடிவார பகுதிக்கு அருகே வேலை பார்த்து வந்த நிலையில், அங்கு மாணவி காதலருடன் தினமும் வந்து செல்வதை பார்த்து, திட்டமிட்டு பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றி இருக்கிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மட்டுமல்லாது இந்தியாவிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளான 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை 10 நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடந்தி வரும் நிலையில், மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்டிருந்த பெண் வாக்குமூலம் தர விரும்பவில்லை என்றும், குடும்பத்துடன் அவர் மைசூர் நகரை விட்டு வெளியேறிவிட்டதாகவும் காவல்துறையினரின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. 

இந்த பாலியல் பலாத்கார வழக்கில், பெண்ணின் வாக்குமூலம் என்பது முக்கியமானது என்பதால் அது பதிவு செய்யப்படாமல் இருப்பதால் வழக்கு வலுவிழக்கும் அபாயம் உள்ளது என்றும் தெரியவருகிறது. பாலியல் பலாத்கார வழக்குகளில் சர்வசாதாரணமாக தப்பும் இதுபோன்ற காமுகர்களை, காவல்துறையினர் சட்டத்தின் பிடியிலிருந்து மீறி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysore College Girl Gang Abused Issue Culprit 5 Arrested Girl Family Get out Mysore due to Feeling guilty


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->