2000 நோட்டு செல்லாது.? துடிதுடித்து பறிபோன உயிர்.! விசாரணையில் பகீர்.!  - Seithipunal
Seithipunal


கோவை பகுதியில் டாஸ்மாக் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் பிணம் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டதில், திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

கடந்த சில நாட்களாகவே வரும் ஜனவரி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், பணத்தை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தது. இந்த சம்பவம் உண்மையா என்பதை அறியும் பொருட்டு ரியல் எஸ்டேட் தொழில் அதிபரான சண்முகம் என்பவர், சுந்தராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளையில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வரும் சதீஷிடம் விசாரித்துள்ளார்.

எனவே, அவரை பயன்படுத்தி பணம் பறிக்க திட்டமிட்ட சதிஷ் அந்த செய்தி உண்மைதான் உங்களிடம் இருக்கும் பணத்தை கொடுத்தால் 15 முதல் 20 விழுக்காடு கமிஷனுக்கு பணத்தை மாற்றித் தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய சண்முகம் அவரிடம் இருந்த 4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான 2000 நோட்டுகளை கொடுத்து மாற்றி தர கேட்டுள்ளார்.

அதன்பின்னர் தங்களுடைய நண்பர்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளையும் வாங்கி தாருங்கள் என்று சதீஷ் கேட்க, சண்முகம் தங்களுடைய நண்பர்களிடம் சென்று கேட்ட போது, அவர்கள் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தி என்று சண்முகத்திடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்து சதீஷிடம் சென்று சண்டையிட்டு பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

எனவே சண்முகத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்து நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து சண்முகத்தை அடித்துக்கொலை செய்து முட்புதரில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளை உண்மைதன்மை அறியாமல் நம்பக் கூடாது என்று தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பலரும் இது போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

murder in kovai goundampalayam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->