#வீடியோ: 189 வருட பிரிட்டிஷ் பாலம் நொடிப்பொழுதில் தகர்ப்பு...!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை நகருக்கும், புனே நகருக்கும் இடையே அதிகளவு போக்குவரத்து செல்லும் பாதையாக இருக்கிறது. இந்த சாலையில் போக்குவரத்து அதிகளவு சென்று வரும் காரணத்தால், இந்த சாலை அதிவிரைவு சாலையாக மாற்றப்பட்டது. 

இதனால் மும்பை முதல் புனே வரையிலான பயண நேரமும் வெகுவாக குறைந்தது. இப்பகுதியில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாலமும் இருக்கிறது. இந்த பாலம் அம்ருதாஞ்சன் பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இந்த பாலம் அங்குள்ள மும்பை - புனே அதிவிரைவு சாலையில் உள்ள லோனாவாலா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டு 189 வருடங்கள் ஆகும் நிலையில், இந்த பாலம் மும்பை - புனே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆபத்தான பகுதியாகவும் இருக்கிறது. 

இதனால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளதும், பல வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திய நிலையில், மேலே உள்ள பழைய பாலத்தை இடிக்க அரசு முடிவு செய்து இருந்தது. இந்த நேரத்துக்காக கட்டுமான பணியாளர்கள் காத்திருந்தனர். 

மேலும், இந்த பாலம் இடிக்கப்படும் பட்சத்தில், வாகன சேவைகள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பிவிடப்படவேண்டும் என்ற பிரச்சனையும் இருந்த நிலையில், தற்போது ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சமயத்தில், தற்போது இந்த பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Pune Express way 189 year old British Amrutanjan Bridge collapsed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->