தனது வீட்டில் பணியாற்றும் பணிப்பெண்ணின் ஏழ்மையை குறைக்க., மனிதாபிமான தம்பதியின் எளிய முயற்சி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் பொதுவாக பல்வேறு வகையான குணங்களை கொண்ட மனிதர்களை உள்ளடக்கி இருந்தாலும்., சில நல்ல உள்ளங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த செய்தி ஒரு சான்றாக அமைகிறது. 

நேற்று முன்தினம் நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியை அடுத்து., மும்பையில் இருக்கும் பெரும்பாலான உணவு கடைகள் மற்றும் பிரதான கடைகள் விடுமுறை அறிவித்து மூடியிருந்த நிலையில்., அதே பகுதியை சேர்ந்த பாத்திமா என்ற இளம்பெண் அங்குள்ள கண்டிவளி நிலையத்திற்கு வெளியே இருக்கும் சிற்றுண்டி கடைகளை நோக்கி உள்ளார். 

இந்த சமயத்தில்., அப்பகுதியில் ரோட்டு கடை நடத்தி வந்த தம்பதியினர் உணவகத்தில் உப்புமா., இட்லி போன்ற உணவு வகைகளை சமைத்து வழங்கியுள்ளனர். இதனைக் கண்ட அவர் கடும் பசியுடன் இருந்ததை அடுத்து., அங்கு சென்று சாப்பிட்டுள்ளார். பின்னர் கடையை நடத்திக் கொண்டிருந்த இரண்டு இளம் தம்பதியினரிடம் பேசியுள்ளார். 

இந்த சமயத்தில்., தம்பதியினர் கூறியது அவரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. கடை நடத்தி கொண்டிருந்த தம்பதிகளின் பெயர் அஸ்வினி மற்றும் ஷெனாய் ஷா ஆகியோர்., கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் நிலையில்., இவர்கள் இருவரும் எம்பிஏ படித்த பட்டதாரிகள் என்பதும் தெரியவந்தது. 

மேலும்., இவரது வீட்டில் பணியாற்றி வந்த பணிப் பெண்ணின் உடல் நலக்குறைவால் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும்., அவர்களின் பகுதிநேர செலவிற்காக தாங்கள் கிடைக்கும் சமயத்தில்., இதுபோன்ற கடைகள் நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர். 

மேலும் தங்களுக்கு தேவையான மற்றும் இந்த கடைக்கு தேவையான உணவுகளை பணிப் பெண்ணின் கணவர் செய்து வழங்கும் நிலையில்., அவர்களின் பொருளாதார சுமையை குறைக்க இது போன்ற கடையை காலையில் நடத்தி வருவதாகவும் கூறினர், 

இதனை கேட்டு இன்ப அதிர்ச்சிக்கு உள்ளான பாத்திமா., இவர்களின் புகைப்படத்தை எடுத்து இணைய தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் தற்போது பெருகி வரும் நிலையில்., தம்பதியினரின் மனிதாபிமானம் பெரும் பாராட்டுக்குரியது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்....

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mumbai new little hotel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->