இந்தியாவில் கொரோனாவிற்கு அடுத்த பலி?.. மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டினை மையமாக வைத்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கரோனா வைரஸால் உலகளவில் 121 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்துள்ளனர். 

இதுமட்டுமல்லாது சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், தற்போது வரை இத்தாலியில் 1016 பேர் பலியாகியுள்ளனர். 

சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களிடம் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைப்போன்று ஸ்பெயின் நாட்டில் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைப்போன்று 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 2 பேர் கரோனா வைரசால் உயிரிழந்த நிலையில், 84 பேர் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அந்தந்த மாநிலங்களில் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய அரசு கரோனாவை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா பாதிப்பு சந்தேகத்துடன் மருத்துவமனையில் அனுமதியாகியிருந்த நபர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா? என்பது தொடர்பான தகவல் ஆய்வில் தெரியவரும். மேலும், மஹாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் சார்பாக கை சுத்திகரிப்பு மருந்துகள், கையுறைகள், மருத்துவ முகமூடி, என்.95 முகமூடி போன்றவற்றை அத்தியாவசிய பொருளாக அறிவித்து அரசால் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai man died when he admit in hospital with corona symptoms


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->