வரலாறு காணாத பேய்மழையில் சிக்கி தவிக்கும் நகரம்.. அரசு உச்சகட்ட எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் வடமாநிலங்களில் பருவமழையானது தொடர்ந்து உச்சம் பெற்று வரும் நிலையில், பல மாநிலங்கள் வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளது.

தெற்கு மும்பையில் இருக்கும் கொலாபா பகுதியில் கடந்த 1974-ஆம் வருடத்திற்கு பிறகு பேய் மழையானது கொட்டித் தீர்த்தது இருக்கிறது. புயல் காற்று மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசியுள்ளது. 

இந்த பேய் மழையால் மும்பையின் புறநகர் இரயில்சேவை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை (5 ஆகஸ்ட் 2020) அன்று கொலாபா பகுதியில் பெய்த மழையளவு 331.88 மில்லி மீட்டர் ஆகும்.

மும்பையில் ஏற்கனவே பெய்ய வேண்டிய பருவ கால அளவு ஆகஸ்ட் மாதத்தின் முதல் 5 நாட்களில் 64 மழை பெய்து விட்ட நிலையில், தெற்கு மும்பை பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள சாண்டா குரூஸ் பகுதியில் 160.23 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாகவே பயங்கர காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், மக்களை வீட்டுக்கு வெளியே இருந்து வெளியே வரவேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Heavy Rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->