நகரமயமாக்கல் என்பது வளர்ச்சிக்கான வாய்ப்பு..! முதலமைச்சர் அதிரடி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் வரும் 21 ஆம் தேதியன்று சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக போட்டிபோட்டுக்கொண்டு வரும் நிலையில்., பாரதிய ஜனதா கட்சி - சிவசேனா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக்கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேசிய சமயத்தில்., இந்தியாவின் ஒட்டுமொத்தமான உள்நாட்டு உற்பத்தியில் நகரங்களின் பங்களிப்பானது 65 விழுக்காடு உள்ளது. நகரங்கள் வளர்ச்சிக்கான இயந்திரங்கள் ஆகும். நகரமயமாக்கல் என்பது வளர்ச்சிக்கான வாய்ப்பாக பார்க்கப்பட வேண்டும். 

நகரங்களின் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் போன்ற வளர்ச்சியினை மாநில அரசு துரிதப்படுத்தி வரும் நிலையில்., எதிர்காலத்திற்கான தேவையை கருத்தில் கொண்டே நகரத்தினை மேம்படுத்தி வருவதாகவும்., பாதாள சாக்கடை மற்றும் குடிநீர்., சாலை போன்ற பிரச்சனைகளும் தொடர்ந்து தீர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுமட்டுமல்லாது வரும் 5 வருடங்களில் இந்தியாவின் நவீன நகரத்தில் ஒன்றாக அமராவதியும் மாற்றமடையும் என்றும்., கடந்த 15 வருடங்களில் காங்கிரஸ் கட்சியுடைய ஆட்சியை ஒப்பிடுகையில் வளர்ச்சி பணிகள் அனைத்தும் இரட்டிப்பு நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும்., வரும் மூன்று வருடங்களில் மகாராஷ்டிரா மாநிலம் கல்வியில் முதலிடம் பிடிக்கும் என்றும் கூறினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai CM speech about city


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->