மத்தியரசின் மோட்டார் வாகன தடை சட்டத்தை இதனால் கைவிட்ட கேரள அரசு!! - Seithipunal
Seithipunal


புதிய மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதை மீறுவோரிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அபராதம் வசூலிக்கப்படும் நிலையில்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறுவோரிடம்அதிக அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது. இச்சட்டத்தால் இருசக்கர வாகனத்தில் செல்லும் நடுத்தர குடும்பங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்த சட்டத்தை அமல்படுத்திய மாநிலங்களில் ஹெல்மட் அணியாவிட்டால் ஆயிரம் ரூபாயும் உரிமம் இல்லாவிட்டால் 5 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அதே போல மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். 

போக்குவரத்துக்கு காவல்துறையினர் காட்டும் இந்த கெடுபிடிகளுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் உருவாகியுள்ளது. இதையடுத்து மேற்குவங்கம், பாஜக ஆட்சி இல்லாத 6 மாநிலங்களான மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இச்சட்டத்தை அமல்படுத்த கூடாதென மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன.

இடதுசாரிகள் ஆட்சி செய்து வரும் கேரளாவில் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து இச்சட்டம் அமலுக்கு வந்தது. பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையயடுத்து அபராதத் தொகை வசூலிக்கும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என கேரள எதிர்க்கட்சிகள் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தன. 

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களும் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் இதுதொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பல்வேறு போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பினராயி விஜயன், அபராதத் தொகை வசூலிப்பதை நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதால் வாகன சோதனையில் தீவிரம் காட்ட வேண்டாம் என  பினராயி விஜயன் போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

motor act not kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->