ஒவ்வொருவர் கையிலும் இருக்கும் பேரழிவு..? சத்தமில்லாமல் கார்பரேட் மேற்கொண்டு வரும் சதி - மக்களுக்கு விடுக்கப்படும் அபாய எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


இணையவழிப் பணப்பரிமாற்றத்தை அதிகப் படுத்துவதாகக் கூறி வங்கிகள் மற்றும் நிதி சேவை சாராத பல நிறுவனங்களும் இத்துறையில் புதிதாககாலடி எடுத்துவைத்துள்ளன.

ஏற்கனவே வங்கிகளும்,மொபைல் சேவை நிறுவனங்களும் இந்த சேவையில்ஈடுபட்டுள்ள நிலையில், இணைய வழி சேவை நிறுவனங்களான அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களும் இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கின்றன.

இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்குப்படி வங்கிகள், ஏர்டெல், வோடாபோன், ஜியோ, ஐடியா போன்ற மொபைல் நிறுவனங்களுடன், பேடிம், பேயுமணி, ஃபிரீசார்ஜ், கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மொபைல் ஆப்கள் வங்கி சேவை, பேமண்ட்ஸ் பேங்க், வாலட்கள், புஷ்பேமண்ட் எனப்படும் யுபிஐ முறையிலான மொபைல் பணப்பரிவர்த்தனை எனப் பலவகையான நிதி சேவைகளை ஒருங்கிணைத்தோ, தனித்தனியாகவோ வழங்கி வருகின்றன.

வாட்ஸ்அப் மற்றும் ட்ரூ காலர் ஆப்களும்பணப்பரிவர்த்தனைக்கான வசதியை தொடங்குவதற்கு அனுமதி வேண்டிக் காத்திருக்கின்றன.

வரும் 2019ஆம் ஆண்டில் இதுபோல இன்னும் பல ஆப்கள் வரக்கூடும். இலவசமாக சேவை கொடுப்பவர்கள் எதற்குஆஃபர்களை அள்ளித் தெளிக்கிறார்கள், நாளிதழிலும், டிவியிலும் விளம்பரம் வெளியிட்டு போட்டி போடுகிறார்கள் என்று ஆராய்ந்தால், இதற்குப் பின் உள்ளஇந்தியா ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வாய்ப்பு சுமார் 1டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது.

தற்போது இலவச சேவையில் பயனரைப் பழக்கியபின் எதிர்காலத்தில் சேவைக் கட்டணத்திற்கு மாறும்போது தவிர்க்கவோ, எதிர்க்கவோ முடியாத நிலைக்கு புறச் சூழலும், பயனரின் மனநிலையும் மாறியிருக்கும்.

இதன் ஒருபகுதிதான் தற்போது ஏடிஎம்மையங்களைக் குறைக்கும் நடவடிக்கை என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

முன்பு ஊழியர்கள் பற்றாக்குறை, செலவு, 24 மணி நேரமும்செயல்படும் என்று ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டது. இப்போது ஏடிஎம் மையங்களுக்கு செலவழிக்க முடியவில்லை, நஷ்டம்என்று அவற்றைக் குறைப்பதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

money online transaction


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->