பொங்கலுக்காக திங்கட்கிழமை விடுமுறையை அறிவித்த அரசு.! மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை! - Seithipunal
Seithipunal


தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றி கூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்திற்கும், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த வருடத்தில் பொங்கல் பண்டிகையினை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், வெளியூரில் பணியாற்றி வரும் நபர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் இரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு, முன்பதிவுகளும் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்தநிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் திங்கள் கிழமை(ஜனவரி 13 தேதி) புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monday holiday for schools in pudhucherry


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->