அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக வரலாற்று சாதனை படைத்த இந்தியா! மட்டற்ற மகிழ்ச்சியில் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


ஒளியை மிஞ்சும் வேகத்தில் இயங்கக்கூடிய எனப்படும் எச்.எஸ்.டி.டி.வி எனப்படும்  ஆளில்லா விமானம் போன்ற அமைப்பை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO உருவாக்கியுள்ளது. ஒடிஷாவில் உள்ள அப்துல்கலாம் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

அக்னி ஏவுகணை பூஸ்டர் வாயிலாக ஹைபர்சானிக் ஏவுகணை 30 கிலோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு ஹைபர்சானிக் ஏவுகணை தனியாக பிரிந்ததும் அதில் உள்ள Scramjet Engine வெற்றிகரமாக இயங்கியது. இதையடுத்து அந்த ஏவுகணை அதிவேகமாக உந்தப்பட்டு ஒளியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது. இதன் மூலம் 20 நொடிகளில் 32.5 கிலோ மீட்டர் உயரத்தை எட்டக்கூடிய ஹைபர்சோனிக் ஆற்றலை பெற்று இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையான சாதனை படைத்திருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் ஒலியின் வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஏவுகணைகளை தயாரிக்க இந்தியாவுக்கு உதவும். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு Scramjet என்ஜினுடன் ஹைபர்சோனிக் ஏவுகணை உருவாக்கும் திறனை DRDO பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகள் அதிவேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் என்றும் அவற்றை எந்த அமைப்புகளாலும் தடுக்கவோ ட்ராக் செய்யவோ முடியாது என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை தொடர்ந்து ஹைபர்சோனிக் தொழியில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சில நாடுகள் மட்டுமே கொண்டிருந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த DRDO விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi wishes to drdo scientist


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->