#Breaking: நாளை காலை 10 மணிக்கு வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் நாடுதழுவிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் சமூக தொற்றாக மாறாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்தியாவில் கரோனாவால் தற்போதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் முன்னதாகவே 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து, பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. 

இந்த நிலையில், நாளை மறுநாள் அதிகாலை 5 மணியுடன் ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீடித்து அறிவிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வந்துகொண்டு இருக்கிறது. இது குறித்து ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். 

மோடியின் ஆலோசனை கூட்டங்கள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், எந்த நேரத்திலும் ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi speech with national peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->