தூய்மை இந்தியா திட்டத்துக்காக பிரதமர் மோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்.!
modi gets award for clean india scheme
இந்தியாவில் மோடி பிரதமர் ஆனதும் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது அமெரிக்காவில் வரும் 24-ந் தேதி வழங்க இருக்கிறது.
பிரதமர் மோடி, இந்தியாவில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.
அந்த திட்டத்தின்படி, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நாட்டில் தூய்மை பாதுகாப்பை அடைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 98 சதவீத கிராமங்களில் கிராமப்புற சுகாதார பாதுகாப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சாதனைக்காக பிரதமர் மோடிக்கு புகழ் பெற்ற அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ், மெலிந்தா அறக்கட்டளையின் ‘குளோபல் கோல்கீப்பர்’ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் வரும் 24-ந் தேதி நடக்கிற விழாவில் இந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.
English Summary
modi gets award for clean india scheme