தோனி, கோலி மற்றும் ரோகித் சர்மாவிடம் தேர்தலுக்காக உதவி கேட்ட பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunalவரும் ஏப்ரல் மாதம் 11 தொடங்கி மே மாதம் 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 66.40% சதவிகித வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். இந்நிலையில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த வாக்காளர்கள் சதவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். 

எனவே வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்க முக்கிய பிரபலங்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தநிலையில்,தற்போதைய  இந்திய கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு  ட்விட்டர் மூலம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

பாரத பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அன்பிற்குரிய தோனி, கோலி மற்றும் ரோகித் அவர்களே, நீங்கள் கிரிக்கெட் மைதானத்தில் எப்போதும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றீர்கள். ஆனால் இந்தமுறை 130 கோடி இந்தியர்களையும் வாக்களிக்க ஊக்குவித்து, வரவிருக்கும் தேர்தலில் அதிகமான வாக்காளர்களை வாக்களிக்க செய்து புதிய சாதனை படைக்க செய்யுங்கள். அவ்வாறு நடந்தால் மக்களாட்சி நிச்சயம் மலரும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

English Summary

modi ask request to cricket players


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal