இராணுவ அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு.. இராணுவ தளபதி அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு எதிரான பல நடவடிக்கையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனா ஆக்கிரமித்தது. இந்த விஷயம் தொடர்பாக எழுந்த பிரச்சனை உலக நாடுகளை அச்சத்திற்கு உள்ளாக்கியது. 

கடந்த ஜூன் 15 ஆம் தேதி இருதரப்பு இராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை சீனா திட்டமிட்டே ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்திய தரப்பில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

சீனாவின் அடாவடித்தனத்தால் இந்தியா அசாதாரண சூழ்நிலையை கையில் எடுக்கலாம் என்ற பரபரப்பு நிலவிய நிலையில், உலக நாடுகள் இரு நாட்டு பிரச்சனைகளை பேசி தீருங்கள் என்று இந்தியா - சீனாவிற்கு அறிவுறுத்தியது. அமெரிக்கா அதிபர் டிரம்பும் இந்திய - சீன பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்றும் அறிவித்திருந்தார்.   

இந்திய - சீன தரப்பில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் இராணுவ தலைமை தளபதி, முப்படை தளபதி, பாதுகாப்பு படை அமைச்சர் கல்வான் பகுதிக்கு விரைந்தனர். அங்கு எல்லை தொடர்பான பிரச்சனை மற்றும் நிலவரத்தையும் கேட்டறிந்து பல ஆலோசனையும் வழங்கியுள்ளனர். 

இந்த நிலையில், இந்திய இராணுவ தளபதி எம்.எம். நரவனே இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதற்கும் தயாராக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இரண்டு நாட்கள் பயணமாக அருணாச்சல் பகுதிக்கு இராணுவ தளபதி விரைந்த நிலையில், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் படைகளை தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MM Naravane Order to ready


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->