கூட்டத்தில் இருந்த எம்எல்.ஏ.வுக்கு,பிரம்படி.! வெளியான வீடியோ காட்சிகள்.!  - Seithipunal
Seithipunal


மாணவர் சங்க போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவம் திருவனந்தபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

கேரள மாநிலத்தில் இருக்கும் திருவனந்தபுரம் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வில் சராசரி மதிப்பெண்ணை பெறாத மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேசிய மாணவர்கள் அமைப்பானது, கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தியது. 

இவ்வாறு போராட்டத்தின் போது காவல்துறையினர் மற்றும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் மீது காவல்துறையினர் லத்தியடி தாக்குதலை நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் மாணவர் அமைப்பு தலைவரான அபிஜித் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ சாஃபி ஆகியோர் பிரம்படியில் பலத்த காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த உடன் அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பட்ட பரபரப்பான சூழலில் கலவரத்தின் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் மாணவர்கள் சங்க தலைவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla attacked by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->