எம்.எல்.ஏ.,வை அதிரடியாக கைது செய்த போலீசார்.!!  - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் 10 துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய சட்டமன்ற உறுப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி விமான நிலையத்தில் 10 துப்பாக்கி தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தின் மதேபுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினறும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவருமான சந்திர சேகர் அவர்கள். கடந்த 20ஆம் தேதி பாட்னா செல்வதற்காக டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். 

அப்போது அவர் எடுத்துவந்த பையை சோதனை செய்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த பயில் துப்பாக்கி தோட்டாக்கள் 10 இருந்துள்ளது. அவரிடம் இதற்கான ஆவணங்கள் போலீசார் கேட்டுள்ளனர்.

அந்த 3.15 போர் ரக துப்பாக்கி தோட்டாக்களுக்கு அவரிடம் சரியான ஆவணங்கள் இல்லை. இதனை அடுத்து போலீசார் அவரின் பயணத்தை ரத்து செய்தனர். மேலும், எம்எல்ஏ சந்திரசேகரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English Summary

MLA ARREST IN DELHI AIRPORT


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal