தமிழகத்தில் நல்ல மாற்றம் வந்துள்ளது.. நிதின் கட்காரி பேச்சு.!! - Seithipunal
Seithipunal


ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலைபோக்குவரது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்., மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் நடைபெற்ற சாலைப்பாதுகாப்பு வார துவக்க விழாவில் மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி பேசிய சமயத்தில்., வருடத்திற்கு இந்தியாவில் சுமார் 5 இலட்சம் விபத்துகள் நடைபெறுகிறது. 

இந்த விபத்துகளில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் உயிரிழக்கும் சோகமும்., இரண்டரை இலட்சம் முதல் மூன்று இலட்சம் மக்கள் காயம் அடைவதும் தொடர்ந்து வருகிறது. விபத்துகளில் உயிரிழக்கும் நபர்களில் 62 விழுக்காடு நபர்கள் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட நபர்கள் ஆவார்கள். 

accident,

இவ்வாறாக அடுத்தடுத்து ஏற்படும் விபத்துகளின் காரணமாக உள்நாட்டு உற்பத்தி 2 விழுக்காடு இழப்பிற்கு வழிவகை செய்கிறது. சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும்., விபத்துகள் தவிர்க்க இயலாத ஒன்றாகியுள்ளது. 

தமிழகத்தில் சாலை விபத்துகள் தற்போது 29 விழுக்காடு குறைந்துள்ளதும்., விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் 30 விழுக்காடு குறைந்துள்ளதும் கட்டாயம் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister nithin karkare speech about tamilnadu state road accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->